எனக்கு மின்னஞ்சல் செய்ய இங்கே சொடுக்குக

   |    01.07.2012 முதல் 7% அகவிலைப்படி உயர்வு அரசாணை    |    முப்பருவப் பாடதிட்டம் முதல் பருவம் 1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை    |    2012 - 2013 தமிழ்நாடு அரசு வரவு செலவு திட்டம் [பட்ஜெட்]    |    ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை    |    ஆசிரியர் தகுதித் தேர்வு தகவலேடு    |    பகுதி நேர கைத்தொழிலாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உறுதிமொழி பத்திரம்    |    தமிழக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத 5000 பணியிடங்கள் தோற்றுவிப்பு    |    பகவான் ஸ்ரீ வைகுண்ட சுவாமியின் பிறந்த நாள் [ மார்ச் 07 ] வரையறுக்கபட்ட விடுப்பு    |    எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வயது மற்றும் பாடத்திட்டம் தளர்வு    |    தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்ளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்    |    பள்ளி மாணவர்களுக்கு காலணி வழங்குதல்    |    பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை, வடிவியல் பெட்டி வழங்குதல்    |   

முந்தைய‌ அரசாணைகள்

 

முந்தைய‌ அரசாணைகள்


காட்டுக‌ - [SHOW]

2012 சனவரி முதல் 2012 மார்ச் வரை வெளியான அரசாணைகள்

அரசாணை எண்:216க்கு (1.6.88) இயக்குனர் விளக்கம்


தானே புயல் நிவாரணம் - ஒரு நாள் ஊதியம் - அரசாணை


தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் - நிதித் துறை விளக்கக் கடிதம்


1-6-88 தலைமை ஆசிரியர் தேர்வு நிலை சிறப்பு நிலை - அரசாணை


மிகையூதியம் [போனஸ்] - அரசாணை


6872 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஒப்பளிப்பு - அரசாணை


கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் - அரசாணை


கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 51 தமிழாசிரியர் பணியிடங்கள் - அரசாணை


பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பு - அரசாணை


உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இரண்டாம் கலந்தாய்வு - இயக்குனர் செயல்முறைகள்


திசம்பர் 2011 அரசாணைகள்

முப்பருவ பாடநூல் பகுப்பு - அரசாணை


கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு 6 தனி AEEO க்கள் - அரசாணை


உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு முன்னுரிமை இரண்டவது பட்டியல்


நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - இயக்குநர் செயல்முறைகள்


மேல்நிலைத் தேர்வு (+2) கால அட்டவணை


முப்பருவ பாட திட்டம் அரசாணை


நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தபட்ட 65 தொடக்கப்பள்ளிகளின் பட்டியல்


831 நடுநிலைப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பதவி ஒதுக்கீட்டு ஆணை


உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தபட்ட 710 நடுநிலைப்பள்ளிகளின் பட்டியல்


710 பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீட்டு ஆணை


நடுநிலைப்பள்ளிகளில் 6, 7 & 8 வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - அரசாணை


உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் புதியது


| பட்டியல் |

| தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு | | ஆசிரியர் தகுதித் தேர்வு அரசாணை |


உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் | செயல்முறைகள் | | பட்டியல் |

| TNPTF மாநில செயர்குழு முடிவுகள் |


கல்வி உரிமை நாள் | இயக்குநர் செயல்முறைகள் | | மாண்புமிகு கபில் சிபுல் கடிதம் |

காலிப் பணியிடம் நிரப்புதல் அரசாணை | பக்கம் 1 | | பக்கம் 2 |

34 AEEOக்கள் நேரடி நியமனம்
| Advertisement | | Prospectus |

முந்தைய அரசாணைகள்

| குறைதீர்நாள் இயக்குநர் செயல் முறைகள் |

| 2012 தமிழ் நாடு அரசு விடுமுறை நாட்கள் |

| 7% அகவிலைப்படி உயர்வு அரசாணை |

| மதிப்பீட்டு முறையில் மாற்றம் - அரசாணை |

| புதிய SSA LOGO |

| ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வு நாட்கள் விவரம். |

| 10,11,12 வகுப்பு மாணவர்க்கு உதவித் தொகை. |

| கலந்தாய்வு இட விவரம். |

| சாஸ்த்ரா பட்டம். |

| பட்டயப்படிப்பு +2 இல்லை. |

மற்றவை

தொடர் மற்றும் முழுமை மதிப்பீடு [CCE] ஒரு நாள் பயிற்சி (19.03.2012) - DIET இராணிப்பேட்டை கலந்துக்கொள்ளவேண்டிய பள்ளிகளின் பட்டியல்


பதவி உயர்வில் செல்வதால் ஊதிய குறைவு ஏற்படுவதை சரிசெய்யம் அரசாணை 57 நாள் 28.01.91


அரசாணை எண் 23 - நாள் 12.01.2011


அரசு கடித எண்: 14483 CMPC 11-1 நாள் - 05.01.2012



விழா முன் பணத்தொகை உயர்வு - அரசாணை


01.07.2012 முதல் 7% அகவிலைப்படி உயர்வு அரசாணை


TET மறு தேர்வு - உங்கள் தேர்வு மையத்தை அறிய இங்கு சொடுக்குக...


A.E.E.O. பணி மாற்றம் 12.09.2012 அன்று வெளியிடப்பட்ட புதிய பட்டியல்


TET - உங்கள் விண்ணப்பத்தின் நிலை எது?


மாறுதல் நெறிமுறைகள் - அரசாணை


CCE பயிற்சி செய்தி அறிக்கை


மாறுதல் விண்ணப்பம் பெறுதல் நிறுத்தம் இயக்குனர் செயல்முறைகள்


ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பப் படிவம் 2012 - 2013


தமிழ்நாடுப் பள்ளிக்கல்வி கொள்கை விளக்கக் குறிப்புகள்


கோடை கால முகாம்


அகவிலைப்படி உயர்வு அரசாணை


  |  தமிழில்  |  ஆங்கிலத்தில்  |

கல்விதுறையில் ஆசிரியர் அல்லத பணியாளருக்கு கலை ஆசிரியராக பணிமாறுதல்' இயக்குனர் செயல்முறைகள்


பள்ளி செல்லா மற்றும் திறனாளிக் குழந்தைகள் கணக்கெடுப்பு SPD செயல்முறைகள்


நிலை இறக்கம் செய்யப்பட்ட தொகக்கப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இயக்குனர் செயல்முறை


TNPTF வட்டார அளவிலான ஆர்ப்பாட்டம் [10-4-2012]


6 வகுப்பு முதல் 9 வகுப்பு வரை முழு ஆண்டுத்தேர்வு கால அட்டவணை


முப்பருவப் பாடதிட்டம் முதல் பருவம் 1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை


2012 - 2013 தமிழ்நாடு அரசு வரவு செலவு திட்டம் [பட்ஜெட்]


ஆசிரியர் தகுதித் தேர்வு


  |  தமிழ்  |  கணிதம்  |  அறிவியல்  |

வருமான வரி அச்சுப் படிவம் 2011 - 2012


குறிப்பு: உங்கள் வருமானத்தையும் பிடித்தங்களையும் பூர்த்தி செய்து வருமான வரி படிவத்தை அச்சுப்படியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

  |  ஆண்கள்  |  பெண்கள்  |

மறைக்க‌ - [HIDE]

தேடல்

Sunday 23 September 2018

மாணவர்களுக்கு ஹெல்த் கார்டு திட்டம்

மாணவர் உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளிப்பதற்காக, மத்திய அரசு திட்டத்தில், 'ஹெல்த் கார்டுகள்' வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில், பள்ளிகளில், டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். பரிசோதனை விபரத்தை பராமரிக்கும் நோக்கில், மாணவ - மாணவியருக்கு, 'ஹெல்த் கார்டு' வழங்கப்படுகிறது. 
இதில், மாணவர் பெயர், முகவரி, 'ஆதார்' எண், மாணவர் அடையாள எண், ரத்தவகை, தடுப்பூசி அளித்தல், ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், உடல் எடை விபரம் குறிப்பிட வேண்டும். மாணவியருக்கு, மாதம், மூன்று, 'சானிட்டரி நாப்கின்' வழங்கியதையும், இக்கார்டில் குறிக்க வேண்டும்.

இலவச பஸ் பாஸ் இழுபறி : மாணவர்கள் திண்டாட்டம்

இலவச பஸ் பாஸ் வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகையான இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் ஒன்றான, இலவச பஸ் பாஸ் திட்டத்தில், மாநிலம் முழுவதும், 20 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கியதும், புதிதாக சேர்ந்தோர் உள்ளிட்ட, அனைத்து மாணவர்களுக்கும், பஸ் பாஸ் வழங்கப்படும்.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களும், மாவட்ட அரசு பஸ் கோட்ட அலுவலகங்களும் இணைந்து, பஸ் பாஸ் வழங்கும் பணியை மேற்கொள்ளும்.
இந்த ஆண்டு, பள்ளிகள் திறந்து, நான்கு மாதங்களாகும் நிலையில், இன்னும் பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. 'புதிய பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்; பள்ளி சீருடை அணிந்திருந்தாலே, பயண சீட்டு வாங்க வலியுறுத்தக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், பெரும்பாலான நடத்துனர்கள், இதை பின்பற்றுவதில்லை. கிராம பகுதிகள் நிறைந்த மாவட்டங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும், இந்த பிரச்னையால், பள்ளி மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவது சவாலாக உள்ளது; அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, இலவச திட்டங்களை தாமதமின்றி வழங்கினால், அரசு பள்ளிகளில், அவர்களை தக்க வைத்து கொள்ள உதவியாக இருக்கும். பஸ் பாஸ் வழங்குவதில், மாதக்கணக்கில் தாமதம் ஏற்படுவதால், பல மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு செல்ல முற்படுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு

தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைப்படி, 31 ஆயிரத்து, 266 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. 
இவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசிடமிருந்து, தமிழக அரசு, நிதியுதவி கேட்டுள்ளது.அப்போது, ஒரு ஆசிரியருக்கு குறைந்த பட்சம், 30 மாணவர்கள் என்ற விகிதத்தில், பள்ளிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

இதன்படி கணக்கிட்டதில், 826 பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. மாணவர் எண்ணிக்கை, 1,053 பள்ளிகளில், மிக குறைவாக உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

மாணவர் குறைந்த, 1,053 பள்ளிகளையும், தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது இயங்கும் பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, 500 பள்ளிகள் மூடப்படும் என, தெரிய வந்துள்ளது.

Friday 31 August 2018

பிளஸ் 2வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு

தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
கற்றல் என்பது தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், வினவுதல், புதியன படைத்தல் என பல நிலைகளில் நடைபெறும் ஒரு செயல்.எழுத்து தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது' வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களை 'காமராஜர் விருதுக்கு' பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.கலை இலக்கிய திறன், விளையாட்டு போட்டி, அறிவியல் விருது, பள்ளி இணை செயல்பாடுகளில் பங்கேற்றவர்களை தேர்வு செய்து, நான்கு செயல்பாடுகளிலும் தலா 10 மதிப்பெண் வீதம் 40க்கு கணக்கிட்டு இதில் முன்னுரிமை பெற்றவர்களை விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
ஒரு பள்ளி சார்பில் அதிக பட்சம் 3 பேரை பரிந்துரைக்கலாம். மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் 20 பேர், பிளஸ் 2வில் 20 பேரை தேர்வு செய்து அதன் பட்டியலை முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் காமராஜர் விருது அளிக்கப்பட உள்ளது. ஒரு மாவட்டத்துக்கு தலா 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், என கூறப்பட்டுள்ளது.

Sunday 26 August 2018

காலை வழிபாட்டு கூட்டச் செயல்பாடுகள்-(27-08-2018)


திருக்குறள்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பொருள்
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
பழமொழி
ALL THINGS COME TO THOSE WHO WAIT
பொறுத்தார் பூமியாள்வார்
பொன்மொழி
பாராட்டும் புகழும் குவியும்போது...குட்டையான வாசலுக்குள் குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும். இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்.
-கலைஞர் கருணாநிதி
இரண்டொழுக்கப் பண்பாடு
🔶 நான் என்னுடைய வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் மனத்திற்கும் துன்பம் தரமாட்டேன்.
🔶 துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவற்றை உதவி செய்வேன்.
பொது அறிவு
🔶 இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்பட்டவர் யார்? சகுந்தலா தேவி
🔶 டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? முகம்மது அசாருதீன்
🔶 உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? தீக்கோழி
நீதிக்கதை
கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்
ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள். ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், ”நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா. என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்என்று கூறினான்.காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி திடீரென வந்து கொண்டிருந்தது.கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான்.
சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் ராமு நடந்து கொண்டான்.
சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு இறந்தவனைபோல் படுத்துக் கொண்டான்.
அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது.
கரடி சோமுவை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.
கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். ”கரடி சென்று விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம்என்று ராமு கூறினான்.
சோமுவும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததைஎண்ணிநிம்மதி அடைந்தான்.கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.
ராமு சோமுவிடம், ”கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?” என்ன என்று கேட்டான்
அதற்குப் சோமு, ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனதுஎன்றான்.
நீதி: ஆபத்தில் உதவாதது நட்பல்ல.
 இன்றைய செய்திகள்
🔶 உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் தேசம் பெருமை கொள்கிறது -பிரதமர் மோடி
🔶 எல்லா மாநிலங்களிலும் குடிமக்கள் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு பரிசீலனை
🔶 ஈராக் நாட்டின் பாக்தாத் நகரம் மற்றும் அந்நாட்டின் எல்லையை ஒட்டிய ஈரான் நாட்டின் கெர்மன்ஷா நகரம் ஆகிய பகுதிகளில் 5.9  ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ..
🔶 எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் திறப்பு; முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் பங்கேற்பு
🔶 தி.மு.. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை செயல் தலைவர் மு.. ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகனும் தாக்கல் செய்துள்ளனர்.. 
 விளையாட்டு செய்திகள்
🔶 ஆசிய விளையாட்டு போட்டி: ஆடவர் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் - தமிழக வீரர் லட்சுமணன் வெண்கலம் வென்றார். 

Saturday 25 August 2018

வீட்டுப்பாடம் எழுத நேரமில்லை: வாசிப்பு பழக்கம் சுத்தமா இல்லை!

வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எந்திரிச்சி நில்லுங்க - உற்சாகமாக காலையில் வகுப்புக்கு செல்லும், மாணவர்களின் மனநிலையை முடக்கிப்போட்டு, மனதளவில் குற்ற உணர்வை சுமக்க வைக்கிறது வீட்டுப்பாடம் குறித்த இந்த உத்தரவு. இதில் இருந்து, மாணவர்களைவிடுவிக்க வேண்டும் என்பதே, பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
மாநில பாடத்திட்டம், சமச்சீர் கல்வித்திட்ட அடிப்படையில், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையில், வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் பிரத்யேக புத்தகங்கள் அளிக்கப்படுவதோடு, பாடங்கள் கையாளப்பட வேண்டிய முறை குறித்து, ஆசிரியர்களுக்கு பாடத்திட்ட செயல்பாடுகளில் விளக்கப்பட்டுள்ளன
ஒவ்வொரு பாடத்தின் பின்புறமும், சுய மதிப்பீட்டு பகுதி, குழு மதிப்பீட்டு செயல்பாடுகள் உள்ளன. இதை பெரும்பாலான பள்ளிகளில் பின்பற்றுவதில்லை; வீட்டுப்பாடம் என்கிற பெயரில், எழுத்துப்பயிற்சிக்கே, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வாசித்தல், பாடத்திட்ட கருத்துகளை, புற சூழலில் இருந்து நேரடியாக பெறுதல் என, செயல்வழி முறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர் பெற்றோர்.
இதனால், மாலை பள்ளி விட்டு, வீடு திரும்பும் குழந்தைகள், விளையாட கூட நேரமின்றி, வீட்டுப்பாடத்திலே மூழ்கி விடுகின்றனர். சி.பி.எஸ்.., பள்ளிகள் பின்பற்றிய இந்நடைமுறைக்கு, அக்கல்வி வாரியம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, வகுப்பு நேரத்திலேயே, எழுத்துப்பணிகளை முடிக்க உத்தரவிட்டது. செயல்வழி முறைகளில், வீட்டுப்பாடம் அளிக்கவும் அறிவுறுத்தியது.
இந்நடைமுறையை, மாநில கல்வித்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளும் மேற்கொண்டால், மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து தப்பிப்பர். வீட்டுப்பாடம் எனும் &'போபியா&'வில் இருந்து, இளம் பிஞ்சுகளை காப்பாற்றுவது, கல்வித்துறையின் கையில் தான் உள்ளது.
'எழுதிக்கிட்டே இருக்காங்க!'
மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சரவணவேல் கூறுகையில்,''அனைத்து பாடங்களுக்கும், தினசரி வீட்டுப்பாடம் அளிக்கப்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகள் எழுதிக்கொண்டே இருக்கின்றனர். இது, பாடத்திட்டத்தின் மீதுள்ள, ஈடுபாட்டை குறைத்துவிடும். செயல்வழியில் வீட்டுப்பாடம் அளிக்குமாறு, கல்வித்துறை உத்தரவிட வேண்டும். இம்முறை மூலம் தான், குழந்தைகளின் தேடல் விரிவடையும்,&'&' என்றார்.